விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ஒளிபரப்பாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. இரு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் புரொமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிரச் செய்துள்ளன.
இந்நிலையில், பிக் பாஸ் 3வது சீசன் வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் முதல் டிவியில் ஒளிபரப்பாகும் என ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரும் ஜூன்.23ம் தேதி திங்கள் முதல் ஞாயிறு வரை ஒளிபரப்பாகிறது. முன்னதாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1, ஜூன் 25-ம் தேதியும், இரண்டாவது சீசன் ஜூன் 17-ம் தேதியும் துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனில் 60 கேமராக்களுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் வசிக்கப்போகும் 15 போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது வெறும் ஷோ அல்ல.. நம்ம லைஃப்.. 😎
பிக்பாஸ் 3 - ஜூன் 23 முதல் உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBoss3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/s3zGzeDKwJ
— Vijay Television (@vijaytelevision) May 30, 2019