‘பிக் பாஸ் வீட்டிற்குள் போகிறேனா?’ - நடிகை சாந்தினி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரபாகவிருக்கும் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் நடிகை சாந்தினி தமிழரசன் பங்கேற்பதாக வெளியான தகவலுக்கு அவர் Behindwoods-க்கு பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.

Actress Chandini Tamilarasan denied participating in Bigg Boss 3 hosted by Kamal Haasan

கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து, முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. இரு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிய நிலையில், மூன்றாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், 3வது சீசன் வரும் ஜூன்.23ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில், பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் போட்டியாளராக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. ‘மன்னர் வகையறா’,‘வஞ்சகர் உலகம்‘,‘பில்லா பாண்டி’,‘வண்டி’,‘ராஜாரங்கூஸ்கி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சாந்தினி சமீபத்தில் நந்தா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகை சாந்தினி கலந்துக் கொள்வது குறித்து நாம் அவரை தொடர்புக் கொண்டபோது, ‘பிக் பாஸ் 3-ல் பங்கேற்க தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை’ என்றும் மறுத்துள்ளார்

தற்போது ‘கறி சோறு’,‘பற’,‘அய்லா’ என்ற ஹாரர் படம் உள்ளிட்ட 4, 5 திரைப்படங்களில் நடிகை சாந்தினி தமிழரசன் பிசியாக நடித்து வருகிறார்.