'கனா காணும் காலங்கள்', 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட தொடர்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் படித்த கவின், 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இயல்பான நடவடிக்கைகளால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே பெற்றார்.

இதனையடுத்து கவினின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகிறது. மேலும், அவ்வப்போது ரசிகர்கள் அவர் நடிக்கும் படம் குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கவின் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பிரபல சீரியல் நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அவர் பிரேம் வெட்ஸ் சுஸ்மா, நல்ல இரு மச்சா என்று வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.