பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ஹீரோயின் யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 27, 2019 04:47 PM
பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் பெயர்சூட்டப்படாத படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்குகிறார். பிரேம்ஜி ஏற்கெனவே மாங்கா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்புதிய படத்தை சூப்பர் டாக்கீஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சமீர் பரத் ராம் தயாரிக்கிறார்.

ஏற்கெனவே இந்த படத்தில் பிரேம்ஜியுடன் பிக் பாஸ் புகழ் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்வயம் சித்தா என்ற இன்னொரு நடிகையும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ‘ஆட்டோ ஷங்கர்’ வெப் சீரிஸில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : Premji Amaran