கவின் எமோஷனலான பதிவு - 'பிக்பாஸ்... அந்த இரவில் எல்லாம் எப்படி மாறிடுச்சுனு..'
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 07, 2020 11:22 PM
'சரவணன் மீனாட்சி' தொலைக்காட்சி தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் கவின். பின்னர் 'சத்ரியன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் 'நட்புனா என்னனு தெரியுமா?' படத்தின் மூலம் ஹீரோவானார்.
![Kavin Emotional post about Bigg Boss and his Friends Kavin Emotional post about Bigg Boss and his Friends](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/kavin-emotional-post-about-bigg-boss-and-his-friends-photos-pictures-stills.png)
அதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு நட்பு, காதல் உள்ளிட்ட விஷயங்களால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.
இந்நிலையில் கவின் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இந்த போட்டோ நான் பிக்பாஸ் செல்வதற்கு ஒரு நாள் முன்பு எனது நண்பர்களால் எடுக்கப்பட்டது. இது அவர்களது வாழ்த்து. இப்போது திரும்பி பார்த்தால் அந்த இரவில் சில விஷயங்கள் எப்படி மாறிவிட்டன என்று ஆச்சரியமாக இருக்கிறது.