’பிரேமம்’ நாயகி – அதர்வா இணையும் தமிழ் ரீமேக் படத்தில் இருந்து வெளியான நியூ அப்டேட்!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் கடைசியாக '100' படத்தில் நடித்த அதர்வா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’கட்டலகொண்டா கணேஷ்’ திரைப்படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு தமிழ் படத்தில் கமிட்டாகி உள்ள இவர், பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரசுராமனோடு ஒரு படத்தில் நடிக்கிறார்.

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரம் ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான நின்னுக்கோரி படத்தின் ரீமேக் ஆகும். ஆர்.கண்ணன் அதர்வாவுடன் இணைந்து ஏற்கெனவே பூமராங் என்ற படத்தை எடுத்துள்ளார்.
மசாலா பிக்ஸ், MKRP புரடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் 96 படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து இந்த படத்துக்கு வசனம் எழுதுகிறார்.
சமீபத்தில் படக்குழுவினரோடு இருக்கும் புகைப்பட த்தை ட்வீட் செய்த இயக்குநர் ஆர்.கண்ணன், அசர்பைஜான் நாட்டில் இறுதிக்கட்ட ஷூட்டில் இருப்பதாகவும் வரும் 23ம் தேதி ஷூட் முழுமையாக முடிய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Happy to Announce that our final schedule with Atharvaa and Anupama.amitesh,At AZERBAIJAN 23rd wrap for the film! More surprising updates are coming your way! Stay @Atharvaamurali @anupamahere @girishpradhan @DoneChannel1 @KabilanVai @masalapixweb @mkrpproductions ✌️👍 pic.twitter.com/uhg0nF4tuI
— kannan (@Dir_kannanR) January 18, 2020