'பிக்பாஸ்' ஜூலி, 'பிரேமம்' மலர் டீச்சராக..... - வைரல் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 06, 2020 12:44 PM
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த ஜூலி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து ஜூலி, 'அம்மன் தாயி' என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இருந்து இரண்டு டிரெய்லர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் ஜூலி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜூலி 'பிரேமம்' படத்தில் மலரே பாடலுக்கு தனது ஸ்டைலில் ரியாக்ட் செய்கிறார். இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
— மரிய ஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) January 3, 2020