சித்தப்புவுடன் பிக் பாஸ் டீம் ரீயூனியன்.. எங்க நடந்தது தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி காதல், சண்டை உள்ளிட்ட சர்ச்சைகளால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

Bigg Boss 3 Reunion at Chithappu Saravanan's temple function

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் வின்னராக முகேன் அறிவிக்கப்பட்டார். இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்திருந்த சாண்டி இரண்டாம் இடம் பெற்றார். இந்த சீசனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், பிக் பாஸ் வீட்டில் ஒரு உறவு முறையுடனே வாழ்ந்தனர். குறிப்பாக சரவணன் மீது சாண்டி, கவின், மீரா உள்ளிட்டோர் மிகவும் நெருக்கமாக பழகினர்.

ஆனால் இந்நிகழ்ச்சியில் இருந்து குறிப்பிட்ட சில பிரச்சனை காரணமாக நடிகர் சரவணன் விலக்கப்பட்டார். செல்லமாக சித்தப்பு என்று அழைக்கப்படும் சரவணனின் திடீர் எவிக்‌ஷன் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது பிக் பாஸ் சீசன் நிறைவடைந்த நிலையில், விஜய் டிவியில் பிக் பாஸ் 3 பிரபலங்கள் கலந்துக் கொண்ட பிக் பாஸ் 3 கொண்டாட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான பலரும் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சரவணனின் குல தெய்வ கோவில் கும்பாபிஷேக விழாவில் பிக் பாஸ் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.இது தொடர்பான புகைப்படத்தை நடிகை மீரா மிதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

பிக் பாஸ் வீட்டில் சித்தப்புவின் கோவில் குறித்து நிறைய பேசியிருக்கிறோம். பிக் பாஸ் வீட்டில் தனக்கு ஆதரவாக இருந்த ஒரே உண்மையான ஜீவன் சித்தப்பு செவ்வாழையுடன் என மீரா மிதுன் குறிப்பிட்டுள்ளார். இதில் மீரா மிதுன், தர்ஷன், பிக் பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்விகா ஆகியோர் புகைப்படத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.