பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 'பிகில்' வெறித்தனம் வீடியோ சாங்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 03, 2019 07:33 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரிதும் பலமாக அமைந்திருந்தது.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே பிகிலு என்ற வீடியோ சாங் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இந்த படத்தில் இருந்து வெறித்தனம் வீடியோ பாடல் தற்போது சன் மியூசிக் வெளியாகவுள்ளதாக அந்த சேனல் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளது.
Namma aattam #Verithanam ah irrukum 🥳
Watch the video song Exclusively from today on #sunmusic
#SunMusicSocial #Thalapathy #Vijay #Bigil pic.twitter.com/1mA41MlRjW
— Sun Music (@SunMusic) November 3, 2019