"கண்ணான கண்ணே.." தன் குழந்தையின் க்யூட்டான புதிய வீடியோ வெளியிட்ட சண்டி!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 02, 2019 02:44 PM
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னரே மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். ரஜினியின் காலா உட்பட பல படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ள இவர், பிக் பாஸ் சீசன் 3யை கலகலப்பாக கொண்டு செல்ல பெரிதும் உதவினார். பிக் பாஸ் சீசன் 3யில் ரன்னர் அப் டைட்டில் சாண்டிக்கு கிடைத்தது.

பிக் பாஸ் வீட்டில் சாண்டி இருந்தபோது, அவரைப் போலவே அவரது ஒரு வயது மகள் லாலாவும் பிரபலமானார். சாண்டியின் பிறந்ததினத்தின் போது, விஸ்வாசம் 'கண்ணான கண்ணே' பாடலை வைத்து பிக் பாஸ் அனுப்பிய வாழ்த்து வீடியோ அனைவரையும் பாசத்தில் உருகச் செய்தது.
இந்நிலையில், இயக்குநர் தமிழரசன் ஒரு ஓவியத்தை சாண்டிக்கு பரிசாக அளித்துள்ளார். அவரே வரைந்த அந்த ஓவியத்தில் சாண்டியும், லாலாவும் உள்ளனர். அந்த ஓவியத்தைப் பார்த்த லாலா, அதில் உள்ள சாண்டிக்கு முத்தமிடுகிறார். பின்னர் அருகில் இருக்கும் நிஜ சாண்டிக்கும் முத்தம் தருகிறார். இந்த வீடியோவை சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை சாண்டி மற்றும் லாலா ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.