சேரன் மகளுடன் பிக்பாஸ் 3 பிரபலம் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் யதார்த்த படங்களின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் சேரன். இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Bigg Boss 3 fame Sakshi with Charen and his Daughter

மேலும் பிக்பாஸில் லாஸ்லியாவுக்கும் சேரனுக்கும் இடையேயான அப்பா - மகள் உறவு பெரிதாக பேசப்பட்டது. சேரனின் மகள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து லாஸ்லியா குறித்து சேரனுக்கு அட்வைஸ் செய்தார்.

இந்நிலையில் சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது குடும்பத்தாருடன் சேரன் மற்றும் அவரது மகளுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், குடும்பத்துடன் சிறப்பான நேரம். என்னுடைய அப்பாவும் சேரன் அண்ணாவும் ஒரே வீட்டில் பார்ப்பது மகிழ்ச்சி. குறிப்பிட்டுள்ளார்.