''இது ஒன்னும் பிக்பாஸ் இல்ல, இதுக்காக நாம வெட்கப்படணும்'' - பிக்பாஸ் 3 பிரபலம் கோபம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் பரவலாக அறியப்படுபவர் வனிதா விஜயகுமார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கே அவரது நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியது.

Bigg Boss 3 Vanitha got angry about South Korean Pop Singer Sully's Death

மேலும் பிக்பாஸில் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்த அவர் அந்த நிகழ்ச்சியின் சுவாரஸியத்திற்கு பெரிதும் காரணமாக இருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தென் கொரியாவை சேர்ந்த பாடகியின் மரணம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், ''தம்பிகளே, தங்கச்சிகளே நாம் நெட்டிஷன்களாக இருப்பதற்கு வெட்கப்படவேண்டும். இதற்கு நாமும் பொறுப்பேற்கவேண்டும். இது ஒன்றும் பிக்பாஸ் இல்லை. இது நிஜ வாழ்க்கை. இணையத்தில் தனக்கு தனக்கு ஏற்பட்ட தொந்தரவு காரணமாக 25 வயது பாப் ஸ்டார் மரணித்துள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.