“அடுத்தப்படம் அறிவிப்பு விரைவில்..” - பிக் பாஸ் பிரபலம் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி காதல், சண்டை உள்ளிட்ட சர்ச்சைகளால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

Bigg Boss 3 Sakshi Agarwal tweet about her next film

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் வின்னராக முகேன் அறிவிக்கப்பட்டார். இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்திருந்த சாண்டி இரண்டாம் இடம் பெற்றார். இந்த சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி அகர்வால் தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

அவரது ட்வீட்டில், “அவள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கிறாள்! அவள் ஒரு பயணமானாள், எல்லா பயணங்களை போலவே அவளது பயணமும் முடியவில்லை. வேறு பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது. என் அடுத்தப்படம் விரைவில் அறிவிப்பு வெளியாகும்..” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ஆக்ஷன்’ திரைப்படத்தில் தான் டப்பிங் பேசியிருப்பதாக சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சாக்ஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.