Bigg Bossக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தி வால் கேம் ஷோவின் சீக்ரெட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 15, 2019 09:04 AM
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியாகத் தான் இருக்கும். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது.

இதனையடுத்து விஜய் டிவி தி வால் (The Wall ) என்ற நிகழ்ச்சி குறித்த புரொமோவை வெளியிடத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி ஆங்கில நிகழ்ச்சி ஒன்றின் தழுவல் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் மாதிரி ஒளிபரப்பை நேரில் கண்ட Behindwoods தொகுப்பாளர் நவநீத் இந்த நிகழ்ச்சி நடைபெறும் விதம் குறித்து தெரிவித்தார். அதன் படி, இந்த போட்டியில் பிக்பாஸ் போல் பிரபலங்கள் மட்டும் அல்லாமல் சாதாரண பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்வர்.
இந்த நிகழ்ச்சியை மாகபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்குகின்றனர். இந்த கேம் ஷோவின் உச்சபட்ச பரிசுத் தொகையாக ரூ.2.50 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. கேட்கும் கேள்விகளுக்கு நாம் சரியாக பதில் சொன்னால் மட்டும் பத்தாது. இந்த நிகழ்ச்சியில் Wall ஒன்று இருக்கும். Wall-ல் மேலிருந்து கிழாக பல தடங்கல்களைத் தாண்டி பந்து ஒன்று விழும். அந்த பந்து எந்த தொகையில் விழுகிறதோ அந்த தொகை நமக்கு கிடைக்கும். மேலிருந்து விழுகிற பந்துகளில் மூன்று வண்ணங்கள் இருக்கும்.
அதில் வெள்ளை பந்து நாம் கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதிலை சொன்னால் விழும். இரண்டாவதாக பச்சை நிற பந்து, போனஸாக குறிப்பிட்ட தொகையில் விழுந்தால் அந்த தொகை நமக்கு கிடைக்கும். மூன்றாவதாக சிவப்பு நிறபந்து. சில பணத்தொகையை அது எடுத்துக்கொள்ளும் அளவுக்கு டேஞ்சரானது.
BIGG BOSSக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தி வால் கேம் ஷோவின் சீக்ரெட் வீடியோ