ஞாபகம் வருதே...பிக்பாஸ் சேரனுக்கு சாண்டி மற்றும் கவின் வைத்த பட்டபெயர் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கடந்த நிலையில் நேற்று முதல் எவிக்ஷன் புராசஸ் தொடங்கியுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 பேரை நாமினேட் செய்யலாம். அதன்படி நாமினேட் செய்யப்பட்டதில் சேரன், மீரா, கவின், சாக்ஷி, மதுமிதா, ஃபாத்திமா பாபு உள்ளிட்டோரின் பெய இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நாமினேஷனுக்கு முன்பாக ஹவுஸ் மேட்ஸ்கள் சக போட்டியாளர்கள் குறித்து பேசியது நேற்று ஒளிபரப்பானது.

Bigg Boss 3 Tamil Yesterday Episode Kavin, Sandy,Cheran

அப்போது ட்ரெஸிங் ரூமில் சரவணன், சாண்டி, கவின் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் எவிக்ஷனை பற்றி பேசும் சாண்டி, சைக்கிளை பற்றி என்ன நினைக்கிறாய் என கவினிடம் கேட்கிறார்.

அதற்கு பதிலளிக்கும் கவின், சுப்ரீயர் மனப்பான்மையில் இருக்கிறார் என்கிறார். இதைத்தொடர்ந்து பேசும் சரவணன், எல்லாரும் பெரிய ஆட்கள்தான், நான் அதையெல்லாம் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்

நீ கூடதான் டான்ஸ் மாஸ்டர் என்கிறார் சரவணன். அதற்கு அதெல்லாம் வெளியில் என்கிறார் சாண்டி. இப்படியாக சேரனை சைக்கிள் என்ற பட்டைப் பெயரை வைத்து பேசி வருகின்றனர் கவின், சாண்டி, சரவணன்.

ஆட்டோகிராப் படத்தில் சேரன் ஞாபகம் வருதே படத்தில் சைக்கிளை அதிகம் பயன்படுத்தி இருப்பார். அவரது பல படங்களிலும் அவர் சைக்கிளை அதிகம் பயன்படுத்தியிருப்பார்

மேலும் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த மறக்கமுடியாத சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கொடுத்த டாஸ்க்கில் அவர் தான் சைக்கிளில் சென்று தனது மனைவியின் பிரசவத்திற்காக நண்பரிடம் உதவிகேட்ட சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்

இதில் எதை வைத்து அவருக்கு சைக்கிள் என பட்டைப்பெயர் வைத்துனரோ தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டிடமும் சேரன் கண்ணியமாக நடந்து கொள்கிறார்.

வயதில் சிறியவரான சாண்டியை கூட மாஸ்டர் வாங்க போங்க என்றுதான் பேசி வருகிறார் சேரன். ஆனால் மற்றவர்கள் சேரனை வேண்டா வெறுப்புடன்தான் பார்த்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க முயற்சி செய்து வரும் சேரனுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.