தனக்கு என்ன குழந்தை பிறக்க உள்ளது என்பதை அறிவித்த எமி ஜாக்சன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 26, 2019 12:34 PM
'மதராசப்பட்டிணம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பின் 'தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, 2.0' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, ஹிந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் பனியட்டோவ் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் திருமண நிச்சயம் மட்டுமே நடந்துள்ளது. இதனிடையே, தான் தாய்மை அடைந்திருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் எமி ஜாக்சன்.
தொடர்ந்து தன் கர்ப்பப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். சற்று நேரத்திற்கு முன் தனக்கு ஆண் குழந்தை பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். பார்ட்டி ஒன்றில் அதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
எமிக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
We’re having a........ ✨💙🧚🏼♂️ pic.twitter.com/DGSqvYKYZr
— Amy Jackson (@iamAmyJackson) August 26, 2019