BIG BREAKING : இந்தியன் 2 படத்தில் இணையும் பிரபல ஹீரோயின்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 15, 2019 03:48 PM
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் மேயாத மான்,மான்ஸ்டர் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன். ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படத்திற்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு பின்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை.
கடந்த ஜனவரி மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே சில நாட்களில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதால், இடையிடையே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் இணைந்ததாக தகவல் கிடைத்துள்ளது.