உலகநாயகனுடன் இணையும் ஆஸ்கர் நாயகன் - பிரம்மாண்ட படத்திற்கான மெகா கூட்டணி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்திற்காக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இணைகிறார்.

A.R. Rahman to collaborate with Kamal Haasan after 19 years for Thalaivan Irukkindran

லைகா நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திற்காக இந்த மெகா கூட்டணி அமைக்கிறது.

தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் அட்லி இயக்கி வரும் தளபதி விஜய்யின் ‘பிகில்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘SK14’ திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரை தொடர்ந்து ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்திற்காக மீண்டும் இணைவதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 19 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இறுதியாக கடந்த 2000ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘தெனாலி’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.