அப்படி என்ன சொன்னார் கவின் ? - மல்லுக்கட்டும் மீரா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 16, 2019 09:51 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா எலிமினேட் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது.

அதில் சேரன், மீரா மிதுன், அபிநயா, சரவணன் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் மீரா மிதுன் அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து மூன்று வாரங்களாக அவர் நாமினேட் செய்யப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் புதிய புரோமோ ஒளிபரப்பாகி வருகிறது. அதில், போட்டியாளர்களுக்கு டிக் டிக் டிக் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது மீரா மற்றும் கவின் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மீராவிடம் கவின் மன்னிப்பு கேட்கிறார். சாரி கேட்டா எல்லா சரியாயிடுமா ? ஹர்ட் ஆனது ஹர்ட் ஆனதுதான் என்று சொல்கிறார். அப்படி கவின் என்ன சொன்னார் என்று இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிந்து விடும்.
அப்படி என்ன சொன்னார் கவின் ? - மல்லுக்கட்டும் மீரா வீடியோ