Confirmed! Kamal - Shankar கூட்டணியில் உருவாகும் Indian 2வில் இணையும் பிரபல Hero
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 16, 2019 01:05 PM
'இந்தியன்' படத்தின் மிகப் பெரிய வெற்றியை பெற்று 22 வருடங்களுக்கு பிறகு 'இந்தியன் 2' படம் அறிவிக்கப்பட்டு விரைவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

முதல் பாகத்தைப் போலவே ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், துப்பாக்கி வில்லன் வித்யுத் ஜாம்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு ரவி மர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் சித்தார்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தான் சித்தார்த் ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Kamal Haasan, Indian 2, Anirudh Ravichander, Shankar