முகென் ராவ் விவகாரம் தொடர்பாக அபிராமி பதிலடி கொடுக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது

பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த நாளே கவின் மீது ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்தார் அபிராமி. அது எப்படிம்மா முதல் நாளே காதல் வரும் என்று கேட்காதவர்களே இல்லை.. அபிராமி வயிற்றில் பாட்டிலை வைத்து குழந்தை போன்று காண்பித்ததை மதுமிதா விளாசியதற்கு அவர் தற்போது பதிலடி கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
முகென் ராவ் என் நண்பர். நான் யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை. எவளுக்காவது பிரச்சனையாக இருந்தால் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். நான் லவ் பண்ணினால் லவ் பண்றேன் என்று அவன் மூஞ்சியை பார்த்து சொல்வேன். நாங்க நண்பர்கள். எங்களுக்கிடையே பிரச்சனை என்றால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதை தீர்க்க யாரும் வர வேண்டாம். உங்களுக்கு பிரச்சனையாக இருந்தால் கண்ணை மூடிக் கொள்ளவும் என்று அபிராமி ப்ரொமோ வீடியோவில் கொந்தளித்துள்ளார்.
BIGG BOSS 3 PROMO :"லவ் பண்றேனு அவன் மூஞ்சிய பாத்து சொல்லுவேன்" உனக்கு என்ன..! அபிராமி பதிலடி வீடியோ