வனிதா வந்தாச்சு..! வம்பு ரெடியாச்சு..! -கடுப்பில் கலங்கிய முகென் ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 13, 2019 03:41 PM
பிக்பஸ் வீட்டில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது.

வனிதா பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததிலிருந்தே மற்ற போட்டியாளர்களின் தவறுகளை சுட்டி காட்டி அட்வைஸ் கொடுத்து வருகிறார். அந்தவகையில் இன்று அபிராமியின் காதல் விவகாரத்தில் மூக்கை நுழைத்த வனிதா அட்வைஸ் கொடுக்கிறேன் என்று கூறி அவரை ஏத்திவிட்டு முகன் ராவ் அபிராமிக்கு இடையில் சண்டை வரவைத்து விட்டார்.
இந்த விவகாரத்தில் அபிராமிக்கு முகன் ராவ்விற்கும் வாக்குவாதம் முற்றியது. ஏற்கனேவே நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, முகன் ராவ்விற்கு, தான் பேசிக்கொண்டிருக்கும் போது யாராவது இடையில் குறுக்கிட்டு பேசினால் கட்டுக்கடங்காத கோபம் வந்துவிடும். பின்னர் தன் கையில் கிடைப்பது எதுவானாலும் உடைத்து நொறுக்கிவிடுவார்.
இந்நிலையில் தற்போது அபிராமியிடம் நீ ஏன் முகென் பின்னால் செல்கிறாய் என நிறைய விஷயம் கூற அதனால் அவரும் முகெனிடம் கோபமாக ரியாக்ட் செய்தார்.
இப்போது முகென் நான் என்ன செய்தாலும் தவறு என்கிறார் என அபிராமி குறித்து கோபமாக பேச வனிதா இவரிடம் வந்து ஆறுதல் கூறுகிறார். இதைப்பார்த்த சாண்டி, வனிதாவை சும்மா நோண்டி நோண்டி விடுகிறீர்கள் என்று கூறகிறார்.
முகென் அப்படி என்ன செய்தார் தெரியவில்லை மற்ற ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பதற்றமாக காணப்படுகின்றனர்.
வனிதா வந்தாச்சு..! வம்பு ரெடியாச்சு..! -கடுப்பில் கலங்கிய முகென் ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ