மீண்டும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளே நுழைந்தாரா வனிதா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 12, 2019 06:26 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரண்டாவது வாரம் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட வனிதா, குறைந்த வாக்குகளை பெற்று போட்டியில் இருந்து வெளியேறினார். வனிதாவின் எவிக்சன் பார்வையாளர்களுக்கு அப்பாடா என்று இருந்தாலும், அடப்பாவமே பிரச்சனை ஏற்படுத்த ஆள் இல்லையே என்ற வருத்தமும் பெருவாரியாக இருந்தது.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் கலகம் ஏற்படுத்தும் போட்டியாளர்கள் அடுத்தடுத்து எவிக்ட் ஆகி வரும் நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியில் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். தற்போது அவரைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
வனிதா வந்ததுமே அதிரடியாக பல கேள்விகளை முன் வைத்ததுடன், இதற்கு மேல் கேவலப்படுத்த வாய்ப்பே இல்லை என்ற அளவிற்கு ஹவுஸ்மேட்ஸை சரமாரியாக வறுத்தெடுத்து வருகிறார்.
ஆக, வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தாரா அல்லது சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டினருக்கு பீதியை கிளப்ப உள்ளே சென்றாரா என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.