Eviction-க்கு பிறகு கவினிடம் Sakshi என்ன சொன்னார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 11, 2019 10:59 PM
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் அவர் வெளியிலிருந்து பார்த்து அதனை வைத்து பிக்பாஸ் போட்டியாளர்களை அணுகத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸியம் அதிகரித்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் மூலம் வெளியேறும் போட்டியாளரை கமல் அறிவிப்பார் என்பதால் பரபரப்பு இருக்கும்.
இந்நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி சாக்ஷி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார். கண்ணீருடன் பிக்பாஸ் வீடு அவரை வழியனுப்பி வைத்தது.
பின்னர் கமல் ஹாசனுடன் மேடையில் தோன்றிய சாக்ஷி அகம் வழியாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடையே பேசினார். அப்போது ஓவ்வொரு போட்டியாளரிடமும் பேசி வாழ்த்து சொன்னார் சாக்ஷி.
பின்னர் கவினிடம் பேசிய அவர், வாழ்த்துகள் கவின். நன்றாக விளையாடுங்கள். விளையாடிட்டு வெளியே வாருங்கள் என்றார். அதற்கு கவின் சாக்ஷியிடம் மன்னிப்பு கேட்டார்.