மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த வனிதா !
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 12, 2019 09:56 AM
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் ( August 12 ) 50 நாட்களை நிறைவு செய்தது. இதனையடுத்து கமல்ஹாசன், போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கமல் அறிவித்தார். பிக்பாஸ் வீடு அவரை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தது.
கடந்த வாரம் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்ததும் ஏகப்பட்ட மாறுதல்கள் நிகழ்ந்தது. இந்நிலையில் இன்று காலை ஒளிபரப்பான புரோமோவில் இந்த வீட்டிற்கு புதிய விருந்தினர் வருகிறார் என பிக்பாஸ் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் நடனமாடியபடியே உள்ளே நுழைந்தார். அப்போது மற்ற போட்டியாளர்கள் அவரை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தபடி இருந்தனர். அவர் விருந்தினராக வந்துள்ளாரா ? அல்லது வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் மீண்டும் உள்ளே வந்துள்ளாரா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த வனிதா, ஒவ்வொரு போட்டியாளர்களையும் உட்கார வைத்து பேசி வருகிறார். அப்போது மிஷன் லாஸ்லியா. லாஸ்லியா யாருனு கண்டுபிடிக்கிறோம் என்று கஸ்தூரியிடம் சொல்கிறார்.
பின்னர் கவினிடம் உங்க லவ்வு மண்ணாங்கட்டி எல்லாத்தையும் தூக்கி குப்பையில போடுங்க. கவின் சத்தியமா சொல்றேன். வொர்த் இல்ல என்கிறார். அதனால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு காணப்படுகிறது.
தற்போது பிக்பாஸ் 3 புரோமோ வெளியாகியுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டினர் முன்பு பேசும் வனிதா, உங்களுக்கு பிக்பாஸ் டைட்டில் கொடுக்கப்படுது. அத தூக்கி அடுத்தவங்களுக்கு கொடுக்குறமாதிரி இருக்கு.
இது சிம்பத்தி ஷோ இல்ல. அண்ணன் அப்பானு கூப்டறது மரியாதை கொடுக்குறது. இது என்ன கிழக்கு சீமையிலே படமா? அப்பா பொண்ணுனா வீட்டுக்கு கிளம்புங்க என்று தெரிவித்தார்.
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த வனிதா ! வீடியோ