Bigg Boss Tamil 3 - நேர்கொண்ட பார்வை அஜித் போல் அபிராமிக்காக வாதாடிய வனிதா
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 13, 2019 12:09 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சில நாட்களுக்கு பிக் பாஸ் வீடு - பிக் பாஸ் ஹோட்டலாகவும், ஹவுஸ்மேட்ஸ் ஹோட்டல் ஊழியர்களாகவும் மாறியுள்ளனர். இந்த ஹோட்டலில் சிறப்பு விருந்தினர்கள் சிலர் வந்து தங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலவாதாக வனிதா அதிரடியாக ரீ-எண்ட்ரி கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அனைவரை பற்றியும் அறிந்துக் கொண்டு, வீட்டிற்கு வெளியே சென்று பார்வையாளராக நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மீண்டும் வனிதா உள்ளே வந்துள்ளார். இதனால் வெளியே மக்கள் எப்படி ஹவுஸ்மேட்ஸை பற்றி நினைக்கிறார்கள் என்பன உட்பட பல விஷயங்களையும் வந்த சூட்டோடு காரசாரமாக விவாதித்தார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 50வது நாளில் தர்ஷனுக்கு வின்னர் மெடல் வழங்கப்பட்டதை கடுமையாக விமர்சித்த வனிதா, சேரன், மதுமிதா, கவின், லாஸ்லியா, அபிராமி, முகென் என ஒருவரையும் விட்டு வைக்காமல் சகட்டு மேனிக்கு வறுத்தெடுக்க தொடங்கியுள்ளார்.
அப்போது அபிராமியின் காதல் பற்றியும், அவரது கண்ணீர் பற்றியும் பேசிய வனிதா, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் கதை பற்றியும், சமூகத்தில் தற்போதைய சூழலில் பெண்களுக்கு ஏற்ற படம் என்பதையும் எடுத்துக் கூறினார்.
இந்த படத்தின் கதையை கேட்டு பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருத்தியாக நடித்திருந்தும், பிக் பாஸ் வீட்டிற்குள் இப்படி அழு மூஞ்சியாக இருக்கிறாயே என்று அபிராமியை கண்டித்தார். பெண்களின் கண்ணீருக்கு ஒரு மதிப்புண்டு, அதை நீ கெடுக்கும் விதமாக நடந்துக் கொள்கிறாய் என்று அறிவுரை கூறினார். இப்படத்தில் அஜித் பேசிய முக்கிய வசனமான No means No என்பதை மேற்கோள் காட்டி பேசிய வனிதா, இந்த பிக் பாஸ் வீட்டில் பெண்கள் பலவீனமடைவதற்கு ஒரு வகையில் ஆண்கள் தான் காரணம் என்று தனது காட்டத்தை அழுத்தமாக பதிவு செய்தார்.
BIGG BOSS TAMIL 3 - நேர்கொண்ட பார்வை அஜித் போல் அபிராமிக்காக வாதாடிய வனிதா வீடியோ