பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி பதிவிட்ட முதல் போஸ்ட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 12, 2019 02:37 PM
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே கவினுடம் நெருக்கமாக உலா வந்தவர் சாக்ஷி. இடையே லோஸ்லியாவுக்கும், கவினுக்கும் நெருக்கம் வளரவே சாக்ஷி தனித்து விடப்பட்டார். பல வகைகளில் அவர் செய்வது பார்வையாளர்களுக்கும், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் வில்லத்தனமாகவே தெரிந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்ஷி தந்து இண்ஸாகிராமில் பதிவொன்றை இட்டிருக்கிறார். அதில் "நீங்கள் விரும்புவதை செய்தால் மற்றவர்களை கவரலாம், அவரது இதயங்களை கவரலாம்” என பொருள்படும் வாக்கியங்களை சேர்த்துள்ளார். அதில் ஹேஷ்டேகில் பிக்பாஸையும் இணைத்துள்ளார்.
இந்த பதிவு கவின் – லோஸ்லியாவை குறிப்பிட்டு எழுதப்பட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். பலர் சாக்ஷிக்கு ஆதரவாகவும், பலர் எதிராகவும் அதில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.