'சாக்ஷி அப்படி பண்ணது செம கடுப்பா இருந்துச்சு' - டிவி சீரியல் பிரபலம் பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 12, 2019 06:46 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது இனிமையான குரலால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் சௌந்தர்யா. இவர் நடித்த Your Shamefully 1 மற்றும் 2 குறும்படங்கள் Behindwoods TVயில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தான் ஏற்கனவே பணிபுரிந்த சாண்டி மற்றும் கவின் ஆகியோர் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''சாக்ஷி பண்ணது தான் செம கடுப்பா இருந்துச்சு.
ஏன்னா எப்படி ஒருத்தவங்க கேமிற்காக பண்ண முடியும். பிரெண்ட்ஷிப்பையும் யூஸ் பண்றாங்க, லவ்வையும் யூஸ் பண்றாங்க. வாழ்க்கையிலயும் இப்படி பண்ணுவாங்களா?. குறிப்பாக அபிராமி விஷயத்தில் அவர் அப்படி நடந்துகொண்டது கடுப்பாக இருந்தது'' என்றார்.
'சாக்ஷி அப்படி பண்ணது செம கடுப்பா இருந்துச்சு' - டிவி சீரியல் பிரபலம் பதில் வீடியோ
Tags : Sakshi, Soundarya, Bigg Boss 3, Kavin