‘சித்தப்பு எங்கப்பு..? -மனுஷன சுத்தமா மறந்தே போயிட்டீங்க..?’ - சரவணனை மறைத்த பிக் பாஸ்?
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 12, 2019 01:21 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டது தொடர்பாக சனிக்கிழமை (ஆக.10) எபிசோடில் தெரியவரும் என்று பிக் பாஸ் கூறியிருந்த நிலையில், அவரை பற்றி எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன் சேரன் மற்றும் மீரா விவகாரத்தின் போது, பஸ்-ல் பெண்களை உரசுவதற்காக சென்றிருக்கிறேன் என சரவணன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக சரவணன் வெளியேற்றப்பட்டார்.
சரவணனின் இந்த திடீர் வெளியேற்றம் அதிர்ச்சியளித்தாலும், அதற்கான காரணம் புரியாமல் ஹவுஸ்மேட்ஸ் அவரது குடும்பத்தினருக்கு ஏதேனும் ஆகிவிட்டதா எனபன போன்ற பல சிந்தனைகளுக்கு ஆளாகினர். அதையடுத்து, பிக் பாஸ் அனைவரிடம் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் வெளியேற வேண்டிய கட்டாயம் மற்றபடி சரவணனும், அவரது குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாகவும், இது குறித்து சனிக்கிழமை எபிசோடில் தெரிய வரும் என்றும் பிக் பாஸ் கூறினார்.
இதனிடையே, பெண்கள் பற்றிய சர்ச்சை கருத்துக்காக மட்டும் சரவணன் வெளியேற்றப்படவில்லை என்றும், ரேஷ்மாவின் எலிமினேஷன் நடந்த அன்று கமல் ஏதோ ஒன்று கூற அதற்கு ‘கமலை அவன் கோர்த்து விடுறான்’ என்று ஒருமையில் பேசியதாகவும், அதன் காரணமாகவே சரவணன் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில், 49 அல்லது 50வது நாள் எபிசோடில் கமல்ஹாசன் சரவணனை பற்றி ஏதேனும் பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை கடந்த சீசன்களில் திடீரென வெளியேறிய ஓவியா, பரணி ஆகியோருக்கு பிரிவு உபசரிப்பு அளிப்பது வழக்கம். அந்த வகையில் சரவணனுக்கு வார இறுதியில் பிரிவு உபசரிப்பு நடைபெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், கமல்ஹாசனோ, ஹவுஸ்மேட்ஸோ, பிக் பாஸ் குழுவினரோ முற்றிலுமாக சரவணன் என்ற போட்டியாளரை மொத்தமாக மறந்துவிட்டனரா அல்லது மறைத்துவிட்டனரா என்பது கேள்வி குறியாக உள்ளது.