Bigg Boss Tamil 3: சித்தப்பு ஏன் போனாரு..? குழப்பம் தீர சனிக்கிழமைக்காக காத்திருக்கும் ஹவுஸ்மேட்ஸ்!!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 06, 2019 11:06 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அதிரடியாக சரவணன் வெளியேற்றப்பட்டது ஹவுஸ்மேட்ஸை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாராவாரம் நடக்கும் சம்பவங்களை வைத்து வார இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுவார். இதுவரை பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் ரேஷ்மா வெளியேறினார். அதையடுத்து, நேற்றைய (ஆக.5) எபிசோடில் சரவணன் பிக் பாஸால் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சேரன் மற்றும் மீரா விவகாரத்தின் போது, பஸ்-ல் பெண்களை உரசுவதற்காக சென்றிருக்கிறேன் என சரவணன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக சரவணன் வெளியேற்றப்பட்டார்.
இது பற்றி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் யாருக்கும் தெரியாத நிலையில், அவர்களுக்கு தெரியப்படும் விதமாக வெளியான முதல் புரொமோ வீடியோவில், சரவணன் வெளியேறியதை தாங்க முடியாமல் கவின், சாண்டி, மதுமிதா ஆகியோர் தங்களது அன்பை கண்ணீர்விட்டு வெளிப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து வெளியான அடுத்த புரொமோவில், சித்தப்பு திடீரென வெளியேற என்ன காரணமாக இருக்கும் என்ற குழப்பத்தில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் சனிக்கிழமை வந்தால் கமல் சாரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
BIGG BOSS TAMIL 3: சித்தப்பு ஏன் போனாரு..? குழப்பம் தீர சனிக்கிழமைக்காக காத்திருக்கும் ஹவுஸ்மேட்ஸ்!! வீடியோ