'தமிழ்நாட்டில் இருந்து படைப்பிற்கு அரசு தரும் அங்கீகாரம் என்ன ?' - பார்த்திபன் கேள்வி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 11, 2019 10:35 AM
பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் சார்பாக பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சத்யா இந்த படத்துக்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் எழுதிய குளிருதா புள்ள பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.
இந்த படத்தின் இரண்டு டிரெய்லர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், மத்தியில் இருக்கை அவருக்கிருந்தும்,மத்திய நிதியமைச்சர்,மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் மிக எளிமையாக,தன்மையாக உண்மையாக எனக்கு செவிமடுத்தார்கள்! தமிழ்- தமிழ்நாட்டிலிருந்து உலக அரங்கை நோக்கி நகரும் ஒரு கலை படைப்பிற்கு அரசு தரும் அங்கீகாரமென்ன? என் வினா!!!! என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்தியில் இருக்கை அவருக்கிருந்தும்,மத்திய நிதியமைச்சர்,மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் மிக எளிமையாக,தன்மையாக உண்மையாக எனக்கு செவிமடுத்தார்கள்! தமிழ்- தமிழ்நா ட்டிலிருந்து உலக அரங்கை நோக்கி நகரும் ஒரு கலை படைப்பிற்கு அரசு தரும் அங்கீகாரமென்ன? என் வினா!!!! pic.twitter.com/hfYoUxf5Jk
— R.Parthiban (@rparthiepan) September 10, 2019