விஜய் டிவி ஸ்டாருடன் நடிக்கும் படம் குறித்து அறிவித்த 'பிக்பாஸ் 3' மூலம் பிரபலமான நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்'' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ரேஷ்மா. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

Bigg Boss 3 Reshma Pasupuleti to act with Vijay Tv Ramar

தற்போது சில படங்களில் நடித்து வருவதாக அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராமர் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், இது வெறும் வயிறு வலிக்க, சிரிக்கும் அளவிற்கு அல்ல. தரையில் விழுந்து சிரிக்கும் அளவிற்கு இருக்கும். விரைவில் உங்களை திரையரங்குகளில் சந்திக்கிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.