'அவங்க பன்றதுல உண்மையில்லையோனு தோணுது' - பிக்பாஸில் சரவணன் குறித்து பிரபல நடிகர் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் நேற்று (ஆகஸ்ட் 5) திடீரென வெளியேற்றப்பட்டார். முன்னறிவிப்பு இல்லாமல் திங்கட்கிழமையே வெளியேற்றப்பட்டதால் அது பார்வையாளர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Sathish Krishnan about Kavin,Losliya Kamal Haasan Bigg Boss 3

மேலும், சரவணன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது மற்ற போட்டியாளர்கள் யாருக்கும் தெரியாது. இந்நிலையில் இன்று காலை வெளியான புரமோவில் சரவணன் வெளியேறியதை பிக்பாஸ் அறிவித்தார்.

அதனை கேட்டவுடன் கவின், சாண்டி மற்றும் மதுமிதா கதறியழுதனர். அதற்கு மற்ற போட்டியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகரும் நடன இயக்கநருமான சதீஷ் கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுமிதா அழுவது உண்மையில்லை. என்று தெரிவித்தார்.