“அதுக்கு அவ எப்பவுமே ரெடி தான்”- பிக் பாஸ் அபிராமி குறித்து நேர்கொண்ட பார்வை ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆக.8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் பேவியூ புராஜக்ட்ஸ் எல்எல்பி நிறுவனத்தின் தயாரிப்பில் ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Nerkonda Paarvai Andrea about Bigg Boss Tamil 3 Abhirami role

ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்தர், டெல்லி கணேஷ், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா தாரியங் Behindwoods-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சக நடிகையும், தற்போது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள தோழியுமான அபிராமி குறித்து பேசினார்.

அப்போது பேசுகையில், ‘முதல் நாளில் இருந்தே அபியும் நானும் நல்ல Friends, அழு-ன்னு சொன்னா போதும் உடனே அழுதிடுவா.. ஆச்சர்யமா இருக்கும். படத்தில் நடித்த நாங்கள் 3 பேருமே மிகவும் நெருக்கமான தோழிகளாகிவிட்டோம். அபிராமி சிறப்பாக நடிச்சிருக்காங்க. நிஜ வாழ்க்கையில் அபிராமி கொஞ்சம் சென்சிட்டிவ் மற்றும் ஸ்ட்ராங்கான பெண். குறுகிய காலத்தில் மிக நெருக்கமான நட்பு பாராட்டினோம். அபிராமியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்க்கவில்லை. மொழி தெரியாததால் பார்க்கவில்லை’ என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

மேலும், திரைப்படம் குறித்து பேசிய அவர், ‘அஜித் சார சந்திச்சது, அவர் கூட நடிச்சது ரொம்ப சந்தோஷமா, நிறைவா இருக்கு. பிங் படத்தில் நடித்த அதே ரோலில் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன். மொழி தான் பெரிய பிரச்சனையாக எனக்கு தெரிந்தது. எனது நடிப்பு தமிழ் மக்களுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன். ஆக.8ம் தேதி திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளியுங்கள்’ என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

“அதுக்கு அவ எப்பவுமே ரெடி தான்”- பிக் பாஸ் அபிராமி குறித்து நேர்கொண்ட பார்வை ஸ்டார் வீடியோ