யுவன் இசையில் Bigg Boss Star நடித்த Part-2 படத்தின் டீசர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 17, 2019 09:50 PM
நடிகர் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி இணைந்து நடித்துள்ள ‘கழுகு 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் வெளியான படம் கழுகு. இந்தப் படத்தில் தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ‘கழுகு 2’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.
இந்த படத்தையும் சத்ய சிவாவே இயக்கியுள்ளார். இதில், கிருஷ்ணா, காளி வெங்கட், பிந்துமாதவி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கொடைக்கானல் பகுதியில் தற்கொலை செய்பவர்களின் உடலை மீட்டெடுக்கும் பணி செய்பவர்களின் கதையை எதார்த்தமாக பதிவு செய்த ‘கழுகு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள ‘கழுகு 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
யுவன் இசையில் BIGG BOSS STAR நடித்த PART-2 படத்தின் டீசர் இதோ! வீடியோ