Bigil USA Desk Others

தான் நடிக்கும் புதுப்படத்தை அதிரடியாக அறிவித்த பிக்பாஸ் 3 பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். யுவன் இந்த படத்துக்கு இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Bigg Boss 3 fame Abhirami Venkatachalam to act in Kajan

இந்த படத்தில் வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் அபிராமியின் வேடம் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

பின்னர் அபிராமி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்நிலையில் இவர் தனது அடுத்த படம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். கஜன் எனப் பெயரிட்டுள்ள இந்த படத்தை வீடு புரொடக்ஷன் மற்றும் அழகப்பா கரி கிங் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. மலேசியா நாட்டுப் படமான இதனை எஸ்.மதன் இயக்குகிறார்.