நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்...! ராயப்பன அடிச்சிக்கவே முடியாது!- புள்ளிங்கோ’ஸ் Review
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 25, 2019 11:51 AM
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள், ராயப்பன் மற்றும் இயக்குநர் அட்லியை புகழ்ந்து பேசினர்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தை தளபதி ரசிகர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து ‘பிகில்’ அடித்து தீபாவளி கொண்டாட்டத்தை பிகில் திரைப்படத்துடன் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், திரையரங்குகளில் பிகில் திரைப்படத்தை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள், விஜய்-அட்லி ஹிட் காம்போவில் இந்த படமும் ஒன்று என கருத்து கூறி வருகின்றனர். விஜய் ராயப்பன், மைக்கேல், பிகில் என நடிப்பில் வெளுத்து வாங்கி உள்ள நிலையில் படத்தில் ராயப்பன் கேரக்டர் அனைவரும் நெஞ்சில் குடி கொண்டுள்ளது.
ராயப்பன் கேரக்டரில் வரும் விஜய் பேசும் வசனங்கள் வெறித்தனமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்டிமென்ட், ஆக்ஷன் என ராயப்பன் கேரக்டரில் விஜய் வேற லெவலில் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என ரசிகர்கள் புகழாரம் தெரிவித்து வருகின்றனர்.
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்...! ராயப்பன அடிச்சிக்கவே முடியாது!- புள்ளிங்கோ’ஸ் REVIEW வீடியோ