''பெண்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும்...'' - இதற்காக பிக்பாஸ் 3 பிரபலம் கோபம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யதார்த்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குநர் சேரன். இவர் 'திருமணம்' என்ற படத்தை சமீபத்தில் இயக்கி நடித்திருந்தார். இதனையடுத்து இவர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'ராஜவுக்கு செக்' என்ற படம் ரிலீஸிற்கு தயாராகியுள்ளது.

Bigg Boss 3 fame Cheran Comments about Cyber Bullying

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நடவடிக்கைகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தற்போது அவர் பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். அத்தகைய பதிவுகள் இவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இணையதளங்களில் நிலவும் குற்றங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், போலி ID உபயோகித்து அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்வை சிதைக்கும் முயற்சியில் அல்லது காயப்படுத்தும் முயற்சியில் இறங்கும் culprits  இனிமேல் நிறுத்திக்கொள்ளட்டும். பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வளைதளங்களில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் ஆபாச படங்களை வீடியோக்களை இணைக்கும் முகவரியற்ற முகங்களை அரசு சட்டப்படி தண்டிக்க ஆவண செய்யவேண்டும். திருந்துவார்களா முகமற்றவர்கள்.

மனரீதியாக ஒருவரை பாதிக்கவைப்பது என்பது பெரும்குற்றம் என்பதை உணரட்டும்..,  நடிகர்களின் இத்தனை வருட உழைப்பை மதிக்காமல் அவர்களின் முன்னேற்றத்தின் காரணம் அறியாமல் ரசிகர்கள், விமர்சகர் என்ற பெயரில் போலியானவர்கள் ஆபாச வார்த்தைகளால் சமூக வளைதளங்களில் பேசுவதை பதிவிடுவதை எதிர்க்கிறோம்...

ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது. சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.