விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தர்ஷன், லாஸ்லியா, முகேன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 23, 2019 12:39 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர்கள் தர்ஷன், முகேன், லாஸ்லியா. இவர்கள் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தி வால் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள்.
தீபாவளி ஸ்பெஷலாக சனிக்கிழமை ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் புரொமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. தர்ஷனும் முகேனும் இந்த நிகழ்ச்சியை இணைந்து விளையாட லாஸ்லியா பார்வையாளராக கலந்துகொண்டுள்ளார்.
விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தர்ஷன், லாஸ்லியா, முகேன் வீடியோ
Tags : Bigg Boss 3, Kavin, Mugen, The Wall, Losliya