மதுமிதாவை சந்தித்த பேசிய பிக் பாஸ் பிரபலம்! - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 24, 2019 09:25 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
![Bigg Boss 3 Tamil Cheran Meet Madhumitha Vijay tv Hotstar Bigg Boss 3 Tamil Cheran Meet Madhumitha Vijay tv Hotstar](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/bigg-boss-3-tamil-cheran-meet-madhumitha-vijay-tv-hotstar-news-1.png)
இந்நிலையில், சமீபத்தில், பிரபல இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பிரபலங்களை பற்றி ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில், 'கவின், லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்னைக்கு வரவேண்டாம்.’ என தெரிவித்தார். அது டுவிட்டரில் பெரும் பேசு பொருளானது. இதையடுத்து நடிகர் விவேக்கும் சேரனுக்கு ஒரு டுவீட்டில் அறிவுரை கூறினார்.
இந்நிலையில், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதாவின் வீட்டுக்குச் சென்ற சேரன் , அங்கு விருந்து உண்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ’அறிவுரை பிக்பாஸ் வீட்டில் மனதில் பட்ட கருத்துக்களை துணிவுடனும் நேர்மையுடனும் பகிர்ந்ததில் மதுமிதாவும் ஒருவர்.. நலம் விசாரிக்க இன்று அவர் இல்லம் சென்று சந்தித்தேன்.. உணவருந்தினேன். உபசரிப்பும் பேசிய தருணங்களும் மனதுக்கு மகிழ்வை தந்தது. மதுமிதாவின் வாழ்வு சிறக்கட்டும்..’என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு நடிகை மதுவிதா, உங்களின் வருகையால், எங்களின் இல்லம் மகிழ்ச்சியில் மூழ்கியது. thanks for coming sir @directorcheran happy happy i am very happy என்று தெரிவித்துள்ளார்.
நாமும் நம்மை சார்ந்தவர்களும் எப்போதும் சந்தோசமாக இருக்கும்படியான சூழலை உருவாக்கிக்கொள்வது நம்கையில்தான்... உங்கள் இருவரின் வாழ்க்கை அழ்கானது.. எப்போதும் சந்தோசப்பூக்கள் பூக்கட்டும்.. https://t.co/BzYw44dKO4
— Cheran (@directorcheran) October 23, 2019