யுவன் - ரியோ இணையும் படத்தில் ஒப்பந்தமான விஜய் டிவி பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 08, 2019 02:35 PM
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் மற்றும் விஜய் டிவி புகழ் காமெடி நடிகரும் இணைந்துள்ளார்.
![Aadukalam Naren and Vijay TV Thangadurai Joins Yuvan and Rio Rajs next Aadukalam Naren and Vijay TV Thangadurai Joins Yuvan and Rio Rajs next](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/aadukalam-naren-and-vijay-tv-thangadurai-joins-yuvan-and-rio-rajs-next-news-1.jpg)
‘பானா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தில் ரியோ ராஜ்க்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க பால சரவணன், முனிஷ்காந்த், ரோபோ ஷங்கர் ஆகியோர் சமீபத்தில் படக்குழுவில் இணைந்தனர்.
தற்போது அவர்களை தொடர்ந்து பிரபல நடிகர் ‘ஆடுகளம் நரேன்’ மற்றும் விஜய் டிவி பிரபலமான காமெடி நடிகர் ‘பழைய ஜோக்’ தங்கதுரை ஆகியோர் படக்குழுவில் இணைந்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் ரியோ ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பாசிட்டிவ் ப்ரிண்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Ayyavai Varaga Varuga Ena Varaverkirom...... @thangadurai123 #YuvanBadri3 @positiveprint_ @dirbadri @Bala_actor @RogerSatinwhite @thisisysr @nambessan_ramya @SinthanL @Rajeshnvc5Kumar @karnamurthyac pic.twitter.com/MFvWeShOtT
— Rio raj (@rio_raj) November 8, 2019