கர்மா உங்களை விடாது - தோனி குறித்த விமர்சன சர்ச்சைக்கு பிரபலம் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐபிஎல் டி20யின் 25வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியது. இப்போட்டியின் கடைசி ஓவரில் நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் குழப்பம் ஏற்பட்டு இறுதியில் நோ பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

Bhavna released a statement about her comments on MS Dhoni's no ball issue

அதனைத் தொடர்ந்து மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, மைதானத்திற்குள் வந்து நோ பால் சர்ச்சை குறித்து நடுவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல டிவி தொகுப்பாளரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான பாவனா தனது ட்விட்டர் பதிவில், நடுவர் நோ பால் கொடுத்ததும் தோனி ஏன் மைதானத்துக்குள் வந்தார் என்ற கேள்வி எழாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆட்டத்தின் விதிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோனி ரசிகர்கள் பாவனாவை கிண்டல் செய்ததகாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் ஒரு கிரிக்கெட் தொகுப்பாளர். வழக்கமாக தோனியை தேவைக்கு அதிகமாகப் புகழ்வதால் நிறைய திட்டுகளை வாங்குபவள்.

வெளிப்படையாக தோனிதான் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரே ஒரு முறை, ஏன் வர்ணனையார்கள் தோனியின் ஆவேசம் குறித்து கேள்வி எழுப்பவில்லை என்று கேட்டவுடன் உடனே தோனியைப் பிடிக்காதவள் ஆகிவிட்டேனா? இது நகைச்சுவையாக இல்லையா ? உங்கள் அனைவரையும் போல நானும் ஆட்டத்தை தொடர்ந்து பார்க்கிறேன்.

ஆட்டத்துக்கான விதிமுறைகள் குறித்து புரிந்துகொள்ள நினைக்கிறேன். வழக்கம் போல மீம் உருவாக்கி தவறாக பொழுதுபோக்கிக் கொண்டிருக்கும் அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

கர்மா உங்களை விடாது. ஒருநாள் உங்களை சார்ந்தவர்களுக்கு இதுபோல் நேரும்.  அப்போது நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரியும். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.