இந்த வருட ஐபிஎல் போட்டிகள் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் முறையே பெங்களூரு, டெல்லி அணிகளை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த போட்டிகளை தமிழில் ஆர்ஜே பாலாஜி வர்ணணையாளராக பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸல் அர்னால்டு, 'டேய் ஆர்ஜே பாலாஜி, நீ என்னடா ஓவரா பேசுற ?' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'பார்ரா... அத யாரு சொல்றானு? அய்யா அர்னால்டு, முடிஞ்சா ட்விட்டர் ல பேசுறத விட்டுட்டு, முடிஞ்சா இங்க வந்து பேசுங்க' என்று பதிலளித்துள்ளார். பின்னர் அதற்கு, 'ஏன் ஆர்ஜே இருக்க கூடாதா?, இந்த அழகான மக்கள் மற்றும் மொழி மேல எனக்கு எப்போதுமே அன்பு இருக்கு.
தமிழ் ட்விட்டர் மக்கள் கேட்டதுனால தான் என்ட்ரி தரேன்' என அர்னால்டு சொல்ல, அதற்கு ஆர்ஜே பாலாஜி, 'சீன் போட்டது போதும். வெல்கம் தமிழ் வர்ணணைக்கு உங்களை வரவேற்கிறேன்' என்றார்.
Scene pottadhu podhum @RusselArnold69 😀 Welcome to the world of Tamil Commentary on @StarSportsIndia 💛👍 https://t.co/rIj6pGTwB5
— LKG (@RJ_Balaji) March 27, 2019