ஐபிஎல் டி20யின் 25வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி ஓவரில் நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் குழப்பம் ஏற்பட்டு இறுதியில் நோ பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, மைதானத்திற்குள் வந்து நோ பால் சர்ச்சை குறித்து நடுவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஒரு சிலர் தோனியின் செயலுக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் தோனியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், 'தட்டிக் கேட்ட தோனிய திட்றாங்க. அப்ப யார விட்டு வைப்பாங்க ? வீடியோ ஆதாரம் போதாதா மற்றொரு பக்கம் தவறு என்பதை சுட்டிக்காட்ட ? ஆனால் அந்த தவறை தட்டிக்கேட்டவிதம் 'தவறு என்று சொல்கிறார்கள்.
அப்படி என்றால் ஒட்டுமொத்த அமைப்பும் தவறில்லையா ? எனது கேப்டனை விட்டுவிடுங்கள். ஒரு நாட்டை விளையாட்டை இதை வைத்து மதிப்பிடாதீர்கள். எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்' என்றார்.