ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் ஐபிஎல் சார்ந்து உருவாக்கப்படும் மீம்ஸ்களால் சமூகவலைதளங்களில் அனல் பறக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபல சினிமா நட்சத்திரங்களும் ஐபிஎல் குறித்து சமூகவலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் படம் 2 வில் சிவாவும், சதீஷும் டான்ஸ் போட்டியில் பங்கேற்பது போன்று காட்சி வரும். அதனை சற்று மாற்றி சிவாவும் சதீஷும் மும்பை மற்றும் டெல்லி ஆகிய அணிகளின் உடையுடன் இருப்பது போன்று மாற்றி இன்றைய சிஎஸ்கே ரசிகர்களின் நிலை என்கிற ஒரு மீம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பகிர்ந்த தமிழ் படம் 2 இயக்குநர், அப்போ ரெண்டு பேருக்கும் ஆடத் தெரியாதுனு சொல்றீங்களா ? என பகிர்ந்தார்.
அதற்கு பதிலளித்த நடிகர் சதீஷ், வெளியூர் ஆட்டக்காரங்கள உள்ளூர் ஆட்டக்காரங்க மதிக்கிறது தாங்க நம்ம கலாச்சாரம் என கரகாட்டக்காரன் ஸ்டைலில் கமெண்ட் செய்துள்ளார்.
Veliyoor Aattakkaarangala Ulloor Aattakkaaranga madhikkiradhu dhaanga namma kalaachaaram 😎
— Sathish (@actorsathish) March 28, 2019