''பாகுபலி 3 ஆம் பாகத்தின் ஷூட்டிங்கிற்கு தயாராகுங்க''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வருடத்துக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. ஐபிஎல் குறித்த செய்திகளும் மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் வைரலாகி வருகிறது.

Baahubali team speaks about David warner for Sun Risers Hyderabad in IPL

அதன் ஒரு பகுதியாக சன் ரைஸஸ் ஹைதராபாத் அணி சார்பாக அதன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டேவிட் வார்னரிடமும் கேன் வில்லியம்சனிடமும் நடிப்புத் துறையில் அவர்களது லட்சியம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு டேவிட் வார்னர் சற்றும் யோசிக்காமல் 'பாகுபலி' என்றார்.  இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

அதனைத் தொடர்ந்து பாகுபலி தரப்பு, அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், டேவிட் வார்னர் நீங்கள் சொன்னதை நாங்கள் கேட்டோம். எந்த வேடம் ஏற்க விரும்புகிறீர்கள் ? பாகுபலியா ?  அல்லது பல்வாள்தேவனா என்று கேள்வி எழுப்பியது. பின்னர் பாகுபலி 3 ஆம் பாகத்தின் படப்பிடிப்புக்கு தயாரா இருங்க என்று குறிப்பிட்டு ஐபிஎல் போட்டிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தது.

பின்னர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி பாகுபலி பஸ்ட் லுக் போஸ்டர் ஸ்டைலில் ஒரு கை ஹெல்மெட்டை தூக்கி பிடிப்பது போல் வடிவமைத்து பாகுபலியாக டேவிட் வார்னர் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.