தர லோக்கல் பாயாக சந்தானம் அசத்தியுள்ள ‘அக்யூஸ்ட் நம்பர்.1 (A1)’ டீசர் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தில்லுக்குதுட்டு 2’ திரைப்படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள A1 திரைப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

Santhanam starrer A1 teaser has been released

ஹாரர் காமெடி திரைப்படமான தில்லுக்குதுட்டு திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள தாரா அலிஷா நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்கிறார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரிக்கிறார். ‘A1-அக்யூஸ்ட் நம்பர் 1’ என்ற இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியான நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. 

சந்தானத்தின் வழக்கமான காமெடி டைமிங் வசனங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. கலகலப்பான காமெடி காட்சிகளுடன் அக்யூஸ்ட் நம்பர்.1-ஆக மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். மேலும், சந்தானத்தின் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தர லோக்கல் பாயாக சந்தானம் அசத்தியுள்ள ‘அக்யூஸ்ட் நம்பர்.1 (A1)’ டீசர் இதோ..! வீடியோ