Veetla Vishesham Others Page USA

Bharathi Kannamma: "கூட்டத்துல கட்டிச்சோத்த அவிழ்த்த வெண்பா".. சம்பவம் செஞ்சுவிட்ட பாரதி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் சென்சேஷனலான சீரியல்களுள் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக வினுஷாவும், பாரதியாக அருண் பிரசாத்தும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்க, பாரதி தம்பி வசனம் எழுதுகிறார்.

Bharathi Kannamma serial today venba 2022 June 15 promo

Also Read | அட.. 90s Kids-ன் ஃபேவ்ரைட் ஹீரோயின் சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகனா..? வைரல் புகைப்படம்.!

இதில் ஆளுக்கொரு குழந்தையை வளர்த்தபடி பிரிந்து வாழ்ந்து வரும் பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்யும் சூழ்நிலை உண்டாகிவிட்டது. இதனிடையே வெண்பாவின் அம்மாவாக களமிறங்கினார்  ‘புன்னகை மன்னன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ரேகா.

இந்நிலையில் வெண்பாவுக்காகவே ஒரு புதிய எண்ட்ரி உள்ளே வந்திருக்கிறார். அவரை தான் வெண்பாவின் அம்மா அழைத்து மேடையி நிற்க வைத்து அறிமுகப்படுத்துகிறார். அதுவும் என்ன சொல்லி என்றால், இவர் தான் எனது மருமகன் என்று சொல்லி அறிமுகப்படுத்துகிறார்.

Bharathi Kannamma serial today venba 2022 June 15 promo

இதனால் டென்ஷனாகும் வெண்பா, தன்னால் இதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை முகத்தில் காட்டினாலும், அத்தனை பெரிய சபையில் தனது அம்மா இவ்வாறு செய்ததை இன்னும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அத்துடன் உடனடியாக அதை மறுத்து தனது நிலைப்பாட்டை அனைவர் முன்னிலையிலும் தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

அதன்படி முன்வந்த வெண்பா, தனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றும், தனக்கு பாரதியைதான் பிடித்திருக்கிறது என்றும் கூற, அங்கிருப்பவர்களுள் பாரதி மற்றும் பாரதியின் சௌந்தர்யா அதிர, கண்ணம்மா மட்டும் வெண்பாவின் குணம் தெரிந்தது தானே என்று டென்ஷன் ஆகிறார். ஆனால் இறுதியில் எழுந்த பாரதி தனக்கு வெண்பா மீது திருமண எண்ணமே இல்லை என்று க்ளியராக சொல்லிவிடுகிறார்.

Bharathi Kannamma serial today venba 2022 June 15 promo

ஏற்கனவே கண்ணம்மா, பாரதியும் வெண்பாவும் திருமணம் செய்துகொண்டதாக நினைத்து நீண்ட நாட்கள் இருந்து வந்தார். பின்பு அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிந்ததும் வெண்பாவிடம் ஏற ஆரம்பித்தார். இப்போது பாரதியின் இந்த பளீச் நிலைப்பாடு கண்ணம்மாவுக்கு ஏறுமுகம்தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

Also Read | “நீ மட்டும் ஓகே சொல்லு பிரியூஸ்”.. யாருய்யா அவரு!.. சூப்பர் சிங்கர்ல அடுத்த லெட்டர் சம்பவம்.!

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma serial today venba 2022 June 15 promo

People looking for online information on Bharathi Kannamma New Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today promo, Bharathi kannamma today episode, Vijay Television, Vijaytv will find this news story useful.