அட.. 90s Kids-ன் ஃபேவ்ரைட் ஹீரோயின் சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகனா..? வைரல் புகைப்படம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90-கள் முதலே தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளுள் குறிப்பிடத்தகுந்த ஹீரோயின் நடிகை சிம்ரன். 1996-ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை சிம்ரன், தமிழில் நட்புக்காக, வாலி, துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே என ஹிட் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

actress simran son pic viral on social media trending

Also Read | ‘Queen 2’ ஷூட்டிங்கில் ரம்யா கிருஷ்ணனோடு பிரபல நடிகை… வைரலாகும் BTS pics

நடிப்பு, டான்ஸ், காமெடி என பட்டையை கிளப்பும் ஆல்-ரவுண்டராக அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்தவர் நடிகை சிம்ரன். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திரைப் படங்களில் நடித்ததுடன், முன்னணி நடிகையாகவும் வலம் வந்திருக்கிறார்.

90களின் ஆதர்ச நடிகையாக திகழ்ந்த சிம்ரனுக்கு ஏராளமான ரசிகர்கள் தென்னிந்தியா முழுவதும் அன்றும் இன்றும் இருக்கின்றனர்.

இப்படி உச்ச நாயகியாக இருக்கும்போதே நடிகை சிம்ரன் பெற்றோர்கள் சம்மதத்துடன் தமது நண்பரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் சிம்ரனின் முதல் மகனுடைய புகைப்படத்தை சிம்ரன் பதிவிட்டு இருக்கிறார். ஆம், அண்மையில் நடிகை சிம்ரனின் முதல் மகனுக்கு பிறந்தநாள் வந்ததையொட்டி, அவரது புகைப்படத்தை பகிர்ந்ததுடன், மகளுடன் இருக்கும் இன்னொரு புகைப்படத்தையும் பகிர்ந்து மகனுக்கு வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் நடிகை சிம்ரன்.

actress simran son pic viral on social media trending

இதை பார்த்த பலரும் சிம்ரனின் மகன் இப்போதே இளம் ஹீரோ போல் இருக்கிறார் என்று இந்த போட்டோவை பற்றி கமெண்ட் செய்து வருவதுடன், இந்த போட்டோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா ? நன்றாக நெடுநெடுவென வளர்ந்து விட்டார் என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

actress simran son pic viral on social media trending

நடிகை சிம்ரன் அண்மைக் காலங்களில் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து பிரசாந்த் நடிக்கும் அந்தாதுன் ஹிந்தி படத்தின் ரீமேக்கான அந்தகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | டி.இமான் வெளியிட்ட அசோக் செல்வனின் ‘வேழம்’ திரைப்படத்தின் ரொமாண்டிக் பாடல்..!

actress simran son pic viral on social media trending

People looking for online information on சிம்ரன் மகன், Simran, Simran Son, Simran Son viral Pic will find this news story useful.