செம்ம... 'பாரதி கண்ணம்மா'.. இன்றைய Episode-ல் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் ‘புதிய அகிலன்’..
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் பிறந்த இரண்டு குழந்தைகளும் வளர்ந்து 8 வயது குழந்தைகளாக இருக்கின்றனர். இதில் கண்ணம்மாவிடம் லக்ஷ்மியும், பாரதியிடம் ஹேமாவும் வளர்ந்து வருகின்றனர்.
அண்மையில்தான் பாரதிக்கு லக்ஷ்மி கண்ணம்மாவின் குழந்தை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் பாரதியை பொறுத்தவரை கண்ணம்மாவை சந்தேகப் படுவதால் லக்ஷ்மி, கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை என்பது மட்டும்தான் தெரியும். மாறாக கண்ணம்மாவுக்கும் தனக்கும் பிறந்த குழந்தைதான் லக்ஷ்மி என்பது தெரியாது.
இதேபோல் பாரதிக்கும் வெண்பாவுக்கும் பிறந்த குழந்தைதான் ஹேமா என்று கண்ணம்மா நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் சீரியல் பரபரப்பாக போய்க் கொண்டிருக்க இதில் பாரதியின் தம்பியான அகிலன் மற்றும் கண்ணம்மாவின் தங்கையான அஞ்சலி இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.
இதில் அஞ்சலி தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு சில ஆபத்தான கட்டம் இருப்பதாகவும், அதனால் கவனமாக இருக்கும்படியும் மருத்துவர் கூறியிருக்கும் நிலையில், இதை அறிந்த வெண்பா, அஞ்சலிக்கு சில தவறான மருந்துகளை தெரிந்தே எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் அஞ்சலியின் கணவராக நடித்து வந்த பிரபல நடிகர் அகிலன் இந்த சீரியலில் இருந்து விலகும் செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதில் அகிலனுக்கு பதில் புதிய நடிகர் வரவிருப்பதாகவும் தகவல்கள் தெரியவந்தன.
இதனிடையே இன்று (செப்டம்பர் 1-ஆம் தேதி) ஒளிபரப்பாகவிருக்கிற இந்த எபிசோடில் இருந்து புதிய அகிலன் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
புதிய அகிலனுக்கும், அஞ்சலிக்கு கெமிஸ்ட்ரி எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சீரியலை காண்பதற்கு ஆவலாக உள்ளனர்.